வெளி சுட்டிகள்: எத்தனை நாட்களுக்குள் என்னுடைய விண்ணப்பத்திற்கு அரசு அதிகாரி பதில் தர வேண்டும்?இந்தியா முன்னேற்ற நுழைவாயில் தகவல் உரிமை பற்றி கேள்வி பதில்கள் (தமிழில்) கேள்வி பதில்: தகவல் உரிமை என்றால் என்ன? தகவல்களை உரிமையோடு அரசாங்கத்தின் எந்த அமைப்பிலும் இருந்து பெறுவது. எப்போது அமலுக்கு வந்தது? 12 அக்டோபெர் 2005 ஆம் ஆண்டு இது அமலுக்கு வந்தது. இந்தியாவில் அணைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் அமலில் உள்ளதா? ஜம்மு & காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்களிலும் இவை அமலில் உள்ளது. தகவல் என்றால் என்ன? எந்த வடிவத்திலும், எந்த பொருள், பதிவுகள், கோப்புகள், மின்னஞ்சல்கள், உத்தரவுகள், கருத்து, அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கை, ஆணைகள், பதிவு புத்தகங்கள், ஒப்பத்தங்கள், காகித தாள்கள், அறம் செய்யும் நிறுவனங்களின் நடத்தைகள், கணக்குகள் மற்றும் உங்களுக்கு அரசாங்கதிலிரிந்து தெரிய வேண்டியவை அனைத்தும். பொது அதிகாரிகளுக்கு தெரிந்த அனைத்து தனியார் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள். இராணுவம் மற்றும் தேசிய இரகசியங்கள் பற்றிய தகவல்கள் இந்த சட்டத்தின் மூலம் பெற முடியாது. தகவல் தரப்படவில்லை என்றால் தகவல் தர மறுத்தாக ஆகுமா? ஆம். அரசாங்க அதிகாரிகள் நீங்கள் கேட்ட தகவல் தரப்பட்ட கால கெடுவில் கொடுக்க வில்லையெனில் உங்களுக்கு தகவல் தர மறுத்துவிட்டார் என்று தன் சட்டம். நான் கேட்ட தகவலை யார் கொடுப்பார்கள்? நீங்கள் அனுப்பிய இலாக்கா உங்களுக்கு தர வேண்டும். அப்படி அது வேறு இலக்காவாக இருந்தால் அந்த அதிரிகாரிகள் சரியான இலாக்காவை கண்டுபிடுத்து உங்கள் விண்ணப்பத்தை சரியான இலக்காவிர்க்கு அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டு விண்ணப்பத்தை உங்களுக்கு நிராகரிக்க அலுவலருக்கு உரிமை இல்லை. காரணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? நீங்கள் கேட்கும் தகவல்களுக்கு எந்த காரணமும் அளிக்க தேவை இல்லை. தகவல் சட்டத்தை பயன்படுத்துவதற்கு எனக்கு என்ன தகுதி வேண்டும்? இந்தியன் என்ற தகுதி மட்டும் தான் வேண்டும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் இது பொருந்தும். தகவல் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணம் எவ்வளவு? விண்ணப்ப கட்டணம் - ரூ. 10/-. தகவல்கள் தயார் செய்த பின் ஒரு பக்கத்திற்கு ரூ. 2 /- வீதம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தால் விண்ணப்ப கட்டண விலக்கு உண்டு. அதற்கு ஆதாரமாக உங்கள் குடும்ப அட்டையின் நகலை இணைக்க வேண்டும். பணத்தை எங்கு செலுத்துவது? யார் பெயருக்கு செலுத்துவது? 1) நேரடியாக பணம் நேரடியாக அரசு அலுவலகத்திற்கு சென்று விண்ணபத்துடன் கொடுக்கவும். நீங்கள் கட்டிய பணத்திற்கு ரசீது உடனே வங்கி கொள்ளவும். ரசீது வாங்குவது மிகவும் அவசியம்.நீங்கள் வேறு சில காரணங்களால் மேல் முறையீடு செய்ய வேண்டுமெனின் அல்லது நீதிமன்றத்திற்கு உங்களுக்கு ஆதராம் இல்லாமல் போய்விடும். 2) நீதிமன்ற தலை கட்டணம். (Court Stamp Fee) நீதிமன்ற தலைகள் மூலம் நீங்கள் அனுப்பும் விண்ணப்பத்துடன் ஒட்டி அனுப்பவும்.
30 நாட்களுக்குள் அரசு அதிகாரி உங்களுக்கு பதில் அனுப்ப வேண்டும். அனுப்பவில்லை எனில் அதே இலாக்காவில் உள்ள மேல் அதிகாரியிடம் (Appellate Authority) முறையீடு செய்யலாம். எத்தனை நாட்களுக்குள் என்னுடைய விண்ணப்பத்திற்கு அரசு மேல் அதிகாரி பதில் தர வேண்டும்? மேல் முறையீடு செய்த அதிகாரிகளிடமிருந்து முப்பது நாட்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும். கிடைக்க வில்லையெனில் "மாநில தகவல் ஆணைக்குழுவிடம்" மேல் முறையீடு செய்யவும். |