இதன் மூலம் கிராம கணக்குகளை கேட்ட விபரங்கள் பற்றி கூறுகிறேன். கிராம கணக்குகள் வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு தயாரித்த படிவம் அனுப்பிய நாள் 2 பிப்ரவரி 2010. http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu/takaval-perra-anupavam/takaval-ketta-pativam-1 9 பிப்ரவரி 2005 அதற்குரிய இலாகாவிற்கு (உதவி இயக்குனர், ஊராட்சிகள், தஞ்சாவூர்) அனுப்பிய நகல் எனக்கு அனுப்பப்பட்டது. தகவல் கொடுக்க மறுத்தால் ரூ. 25,000/- அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu/takaval-perra-anupavam/mavatta-atciyarin-patil 23 பிப்ரவரி 2010 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காசாங்காடு கிராம தலைவரிடம் தகவல்கள் அனுப்பும்படி கேட்டு கொண்டதின் நகல் அனுப்பப்பட்டது. http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu/takaval-perra-anupavam/tunai-vattara-aluvalakam இதன் மூலம், உங்களுக்கு தெரியாத இலாக்காவை விட்டு வேறு இலாக்கவிடம் நீங்கள் தகவல் கேட்டால், உங்களின் மனு நிராகரிக்க படாது. அதற்குரிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது தெளிவாக தெரிகின்றது. http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu/takaval-perra-anupavam/matukkur-onriyam 20 மார்ச் 2005 வட்டார வளர்ச்சி அலுவலர், மதுக்கூர் அனுப்பிய தகவல்கள் கிடைக்கபெற்றது. இந்தியன் என்று நான் கேட்ட தகவல்களுக்கு முறையாக பதிலளித்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எனது நன்றிகள். அளித்த தகவலுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்று எனக்கு அளித்த பதிலில் குறிப்பிடவில்லை. பக்கத்திற்கு இரண்டு ருபாய் வீதம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். |
கிராம கணக்குகள் > 2008 - 2009 ஆம் ஆண்டு >