தகவல் பெற்ற அனுபவம்

எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் பார்போம்.

கிராமத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அரசாங்கம் அளிக்கும் சலுகைகள், கிராம வரவு செலவு கணக்குகள், உள் கட்டமைப்பு, கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கணக்குகளும், செய்த பணிகளின் புகைப்படங்களும் பற்றி தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பொது தகவல் அதிகாரியிடம் கேட்டேன்.

மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010 
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மனுவை தபால் துறை அந்த இல்லாகாவிடம் சேர்த்த விபரம்: 

மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்ட ஒப்புகை மற்றும் கேட்ட தகவலை அனுப்ப கோரி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) இட்ட ஆணை:
முறையான இந்த மாவட்ட ஆட்சியரின் பதிலுக்கு எமது பணிவான நன்றிகள்.
உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)  ஒப்புகை கடிதமும் காசாங்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு பிறபித்த ஆணையும்:
அவ்வளவு தான் பதிலும் கிடைக்கவில்லை, தகவல் கொடுக்க இயலாமைக்கும் காரணமும் கொடுக்கவில்லை.

காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் தகவல் உரிமை சட்டத்தை எவ்வளவு மதிகின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.

51 நாள் ஆகியும் பதில் கிடைக்காத காரணத்தால் மேல் முறையீடு விண்ணப்பம் மாவட்ட அட்சியகத்திர்க்கு அனுப்பினேன்.

மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en

இன்னும் பதிலுக்காக வழிமேல் விழி வைத்து கத்து கொண்டிருகின்றேன்.

இதுவே தகவல் உரிமை சட்டத்தில் ஒரு இந்திய கிராமத்தானின் நிலைமை.

Comments