2011 மாநில சட்டபேரவை


வாக்கு எண்ணிக்கை இடம்:   வட்டார கிராமப்புற மேம்பட்டு நிலையம் (
Regional Institute of Rural Development),  பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை தொகுதியில் 77.67  சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதற்கான சான்றாதரவு கோப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள்: 65611 (72.36 %)
பெண்கள்: 80097 (82.64 %) 
மொத்தம்: 1,45,708 (77.67) 
வாக்களிக்க விருப்பமில்லை (49-O): 65

தேர்தல் முன் விபரங்கள்:

தேர்தல் நாள்: விக்ருதி பங்குனி 30 [13 ஏப்ரல் 2011] 
வாக்காளர் பட்டியல்: கீழே இணைக்கப்பட்டுள்ளது
காசாங்காடு கிராமத்தில் மொத்தம்  வாக்களிக்கும் தகுதி உடையோர்: 2259 ( 
ஆண்கள் - 1055, பெண்கள் - 1204)
இது பட்டுகோட்டை தொகுதிக்கு வாக்களிக்க தகுதியானவோர் 182,191 ஒப்பிடுகையில் 1.23% சதவிகிதமாகும். தஞ்சை மாவட்டம் முழுவதும் வாக்களிக்க தகுதியானவோர் 1,521,430 ஒப்பிடுகையில் 0.15% சதவிகிதமாகும்.
மண்டல எண்: 6
மண்டல அதிகாரி: நாகேந்திரன், Deputy Block Development, Office, Madukkur (04373-260220)
மாவட்ட அதிகாரி: 
M. S. Shanmugam.I.A.S., District Election Officer/District  Collector, Thanjavur  
தொலைபேசி: 04362 - 230102
கைபேசி: 94441 79000
நிழற்பேசி: 04362 - 230857/230627

போட்டியிடும் வேட்பாளர்கள்:

தேசிய அளவில் அங்கிகரித்த கட்சிகளின் வேட்பாளர்கள்:
 1. இன்பரசன் சிதம்பரம், ஆவிட நல்ல விஜயபுரம் [பகுஜன் சமாஜ் கட்சி] [யானை]
 2. முரளிகணேஷ் வைத்தியநாதன், பட்டுக்கோட்டை [பஜக] [தாமரை]
 3. ரெங்கராஜன் ராமசாமி, மயில்பாளையம் [இந்திய தேசிய காங்கிரஸ்] [கை]
மாநில அளவில் அங்கிகரித்த கட்சிகளின் வேட்பாளர்கள்:
 1. சரவணன் அண்ணாமாலை, நாஞ்சிக்கோட்டை [இந்திய ஜனநாயக கட்சி] [மோதிரம்]
 2. செந்தில்குமார் நாடிமுத்து , பட்டுக்கோட்டை [தேசிய முற்போக்கு திராவிட கழகம்][முரசு]
சுயேட்சை வேட்பாளர்கள்:
 1. ஐரின் அந்தோணி, அணைக்காடு [சுயேட்சை][தொலைக்காட்சி]
 2. சிங்காரவடிவேலன் ராமலிங்கம், மதுக்கூர் வடக்கு [சுயேட்சை][மெழுகுவர்த்தி]
 3. செந்தில்குமார் செல்வராஜ், பட்டுக்கோட்டை [சுயேட்சை][கூடை]
 4. யோகானந்தம் மாரிமுத்து, ஆலத்தூர் [சுயேட்சை][கோட்]
கடந்த ஐந்து வருட மாற்றங்கள்:

முன்னேற்றங்கள்:
 1. புதிய பள்ளி கட்டிடம்
 2. இரு புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி
 3. ஆரம்ப சுகாதார நிலையம்
  1. வரபோகும் தேர்தலை ஒட்டி கிடைக்க பெற்றது. ஓட்டு வாங்குவதற்கான நாடகமா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.
 4. மாரியம்மன் கோவில் முன் நாடக மேடை (கிராமத்தினரின் நன்கொடையும் இதில் அடங்கும்)
பராமரிப்புகள்:
 1. சில தார் சாலைகள் புதுபிக்கபட்டது
 2. நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்பட்டது.
சங்கடங்கள்:
 1. கிராமத்தின் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்து கிராம தலைவர் பதவி நீக்கம் பெற்றது. இந்த நடவடிக்கை பற்றி தெளிவான தகவல்கள் பற்றி கேட்டறியப்படும்.
 2. தண்ணீர் பட்டுவாடா செய்வதில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்து நாச வேலைகளில் கிராம தலைவர் ஈடுபட்டது.
  1. தண்ணீர் மேல் எக்கிகளை அனுமதியின்றி பறிமுதல் செய்ததது.
  2. தண்ணீர் குழாய்களை அறுத்தது.
 3. போகி பண்டிகை (2011) மற்றும் அதனை தொடரும் பொங்கல் பண்டிகை அன்று சாலைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில் சாலைகளை பெயர்த்து காசாங்காடு கிராம மக்களுக்கு மிகுந்த பயண சிரமங்களை உள்ளாக்கியது.
 4. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை அதற்குரிய நேரத்தில் தர மறுப்பது. கேட்ட தகவல்கள் இதுவரை ஆறுமாதமாகியும் இன்னும் கிடைத்த பாடில்லை? அரசாங்கம் கிராமத்திற்கு ஒதுக்கிய  பணத்தில்/பொருட்களில் ஏதேனும் மோசடியா?
மேற்குறிப்பிட்டுள்ள தகவலில் பிழைகள்/திருத்தங்கள்/சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உட்பிரிவு: (Ward)

1. நடுத்தெரு
2. கீழத்தெரு மற்றும் தெற்குதெரு
4 . வடக்குத்தெரு மற்றும் மேலத்தெரு
(உட்பிரிவு 3 அரசு பதிவேட்டில் இல்லை)

உட்பிரிவு - 2 க்காண வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 
(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்) 
மேற்குபகுதி,
காசாங்காடு 614613

உட்பிரிவு - 1,4 க்காண வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 
(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்)
கிழக்குபகுதி,
காசாங்காடு 614613
ċ
AssemblyElection2011.zip
(7542k)
காசாங்காடு இணைய குழு,
Mar 30, 2011, 9:38 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Apr 15, 2011, 11:52 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Apr 3, 2011, 7:51 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Apr 3, 2011, 6:35 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Apr 15, 2011, 11:42 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Apr 15, 2011, 11:42 PM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Mar 18, 2011, 9:42 AM
Ċ
காசாங்காடு இணைய குழு,
Mar 18, 2011, 9:42 AM
Comments